மு.க.ஸ்டாலினை போலீசார் தடுத்து நிறுத்தியது ஏன்?: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சேலம் செல்லும் வழியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை போலீசார் எதற்காக தடுத்து நிறுத்தினார் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.ஐகோர்ட்டில், தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-தமிழகம் முழுவதும் மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவுகிறது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. எனவே, சமூக நலன் கருதி, அடுத்த மழைகாலம் வருவதற்குள், இந்த ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வார எங்கள் கட்சியான தி.மு.க. முடிவு செய்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தி.மு.க. தொண்டர்கள் கடுமையாக உழைத்து தூர் வாரி வருகின்றனர். சேலத்தில் கச்சராயன் குட்டை ஏரியை தி.மு.க. தொண்டர்கள் தூர் வாரினார்கள். இதை தடுக்கும் விதமாக அ.தி.மு.க. தொண்டர்களுடன் கூட்டு சேர்ந்து, அதிகாரிகள் அந்த ஏரியில் இருந்து வண்டல்மணலை அள்ளிச் சென்றுவிட்டனர். இதை பார்வையிட சென்ற என்னை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனவே, சமுதாய நலனுக்காக நீர் நிலைகளை தூர்வாரும் தி.மு.க. தொண்டர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *