மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கர்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கடந்த மாதம் 30ஆம் தேதி இரு அணைகளிலிருந்தும் நொடிக்கு 3 ஆயிரத்து 365 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.தொடக்கத்தில் நொடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து, பின்னர் படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.அணையின் நீர்மட்டம் 22 புள்ளி நான்கு இரண்டு அடியாகவும், நீர் இருப்பு 4 புள்ளி எட்டு மூன்று டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இரு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *