மோசடி செய்ததாக சசிகலா அக்கா மகன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை: அதிமுகவில் எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக சசிகலா அக்கா மகன் மீது தொழிலதிபர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பூந்தமல்லியை சேர்ந்த தொழிலதிபர் அசோக்குமார் (51) அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2011ம் ஆண்டு முதல் நீலாங்கரையை சேர்ந்த பாஸ் (எ) பாஸ்கரனுடநட்பாக பழகி வந்தேன். ஒருநாள் பாஸ்கரன் அவரது வீட்டிற்கு அழைத்தார். அப்போது, ‘உங்களுக்கு அரசியலில் ஈடுபட விருப்பமா?’ என்று கேட்டார். அதற்கு, ‘நான் இன்னும் முடிவு செய்யவில்லை’ என்று கூறினேன். அதற்கு தான் “தலைவன்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருவதாகவும், அதற்காக தமிழகம் முழுவதும் மன்றம் தொடங்க இருப்பதாகவும் அதற்கு நீ தான் தலைமை நிர்வாகியாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

அதன்படி, நான் தமிழகம் முழுவதும் மன்றத்தை நிறுவி லட்சக்கணக்கில் செலவு செய்தேன். அதற்கான பணத்தை பாஸ்கரன் தருவதாக கூறினார். இதற்கிடையே 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பாஸ்கரன் மன்றம் சார்பில் மூன்று சீட்டுகள் கேட்டுள்ளதாகவும், என்னுடைய சித்தி சசிகலா, அண்ணன் டிடிவி.தினகரன் அந்த சீட்டுகளை வாங்கி தருவதாகவும் உறுதி அளித்துள்ளதாக கூறினார். மேலும் நீ பூந்தமல்லி தொகுதியில் எம்எல்ஏவாக நிற்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். அதற்காக, ரூ.1.5 கோடி பணம் கேட்டார். மேற்படி பணத்தை நீலாங்கரையில் உள்ள வீட்டில் பாஸ்கரனை சந்தித்து கொடுத்தேன். கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டேன். அதற்கு அவர் நீ நம்பவில்லையா?

என்று கூறி என்னை நம்பி எங்களிடம் பணம் கொடுத்தவர்கள்தான் எம்எல்ஏ, எம்பிக்களாக உள்ளனர் என்று கூறினார். பின்னர் எனக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கித்தர முடியாவிட்டால், தனியாரிடம் மற்றும் அரசு மூலமாகவோ ஒப்பந்தங்களை எடுத்து தருவதாக உறுதி அளித்தார். பாஸ்கரன் சொன்னபடி எனக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி தரவில்லை. அரசு ஒப்பந்தமும் பெற்று தர வில்லை. மேலும் மன்றத்திற்கு செலவு செய்த ரூ.5 கோடி பணத்தை கேட்ட போது என்னை பாஸ்கரன் மிரட்டும் வகையில் பேசினார். உன்னை இல்லாமல் செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து நான் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே என்னை ஏமாற்றி ரூ.6.5 கோடி மோசடி செய்த பாஸ்கரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *