மோடிக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த இந்திய வீராங்கனைகள்

Comments (0) இந்தியா, செய்திகள், விளையாட்டு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உலகக்கோப்பை முடித்து நாடு திரும்பிய இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து மழை பொழிந்து வரும் நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து வீராங்கனைகள் வாழ்த்து பெற்றனர்.
இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. தோல்வியை சந்தித்தாலும், கடுமையாக போராடிய இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை நாடு திரும்பிய இந்திய வீராங்கனைகளை மும்பை விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, இந்திய மகளிர் அணிக்கு டெல்லியில் பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில், வீராங்கனைகளுக்கு நினைவுப்பரிசும், ஐம்பது லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக, இந்திய வீராங்கனைகள், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தவிர, ரயில்வே துறை சார்பாகவும் 10 இந்திய வீராங்கனைகளுக்கு தலா 13 லட்ச ரூபாயை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். இதனையடுத்து, இந்திய மகளிர் வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, பேசிய மோடி, வீராங்கனைகள் தோற்கவில்லை என்றும், ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனதில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார். தவிர, கிரிக்கெட் வரலாற்றில் மகளிருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் எனவும் மோடி தெரிவித்தார். இந்திய கேப்டன் மித்தாலி ராஜின் பொறுப்பு சிறப்பாக இருந்ததாகவும், ,மோடி இந்த சந்திப்பில் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, வீராங்கனைகள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட் ஒன்றினை பரிசாக அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *