மோடி – முதல்வர் சந்திப்பு!

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக இன்று(ஜூலை 25 ஆம் தேதி) பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துள்ளார்.குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.
கடந்த வாரம் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயக்குமார் தலைமையில் 6 அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரை நேற்று சந்தித்து நீட் தேர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தினர்.இதற்கிடையே குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அவரைத் தொடர்ந்து முதல்வர் கே.பழனிசாமியும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இரு தரப்பினரும் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற வளாகத்தில் காலை 11 மணிக்கு மோடியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விளக்களிக்க வேண்டும். இந்த ஆண்டு மட்டுமல்லாது நீட் தேர்விற்கு நிரந்தர விளக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவை காரணமாக வைத்து அதிமுகவின் இரு அணியினரும் டெல்லியில் பிரதமரை சந்திப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *