ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவில் நுழைய தடை

Comments (0) இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அந்நாட்டு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் விசா பெற்று வைகோ அங்கு சென்றார்.கோலாலம்பூரில் விமானத்தில் இருந்து இறங்கிய வைகோவின் பயண ஆவணங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அத்துடன் தாங்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உயர் அதிகாரிகளை சந்திக்குமாறு வைகோவை அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு சென்ற வைகோவை தாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் தங்கள் பெயரும் இருக்கிறது என்று கூறி அதிகாரிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுத்துள்ளனர்.வைகோவின் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ள மலேசிய அதிகாரிகள் அவரை தனி அறையில் அமர வைத்துள்ளனர். தனி அறையை விட்டு வெளியேறவும் வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தனி அறையில் இருக்கும் வைகோவை வேறு யாரும் சந்திக்கவும் மலேசிய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு காரணமாக வைகோ உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.vaikoo_0மேலும் இன்று இரவு மலேசியாவில் இருந்து மீண்டும் விமானம் மூலம் வைகோ சென்னைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *