யாரும் ஜிஎஸ்டி குறித்து பீதியடைய தேவையில்லை.- வெங்கையா நாயுடு

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அரசியல் கட்சிகள் ஜிஎஸ்டியை அரசியலாக்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார்.நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி நாளை (30–ந் தேதி) நள்ளிரவுக்கு பின்னர் அமலுக்கு வருகிறது. இந்த வரி விதிப்புமுறையை அறிமுகம் செய்யும் விழா, நாளை நள்ளிரவு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பா.ஜனதா அழைப்பு விடுத்து உள்ளது.இந்த விழாவை புறக்கணிப்பதற்கு மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், தேவையற்ற வகையில், பேரழிவு ஏற்படுத்தும் அவசர கதியில் இதை அறிமுகம் செய்வது மத்திய அரசின் மற்றொரு வரலாற்று தவறு ஆகும் என மம்தா பானர்ஜி கூறிஉள்ளார். மம்தாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியை புறக்கணித்து உள்ளது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஜிஎஸ்டியை அரசியலாக்க வேண்டாம் என மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசுகையில், “நீண்ட நாள் நடவடிக்கையான ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் தொடக்க காலத்தில், குறுகிய காலங்களுக்கு ஒரு எதிர்மறையான பாதிப்புக்கள் இருக்கலாம், பணவீக்கம் மற்றும் ஜிடிபியில்.”என கூறிஉள்ளார். ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம், அவர்கள் தயாராக இருக்க வேண்டும். வரி ஏய்ப்பாளர்கள் தவிர்த்து யாரும் ஜிஎஸ்டி குறித்து பீதியடைய தேவையில்லை.நீண்டகால வளர்ச்சி மற்றும் பயனுக்கு ஆரம்பகால விளைவுகளை சந்திக்க மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என வெங்கையா நாயுடு பேசிஉள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *