ரஜினியிடம் சரண்டரான நடிகை கஸ்தூரி!

Comments (0) அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக வலைத் தளங்களில் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் கண்டபடி பேசிய கஸ்தூரி, நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். தன்னைப் பற்றி சமூக வலைத் தளங்களில் பேசுபவர்கள், ஆதரித்து தொலைக்காட்சி வாதங்களில் ஈடுபடுவோர், பத்திரிகையாளர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.காலா படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை வந்த ரஜினிகாந்த், கடந்த இரு வாரங்களாக பலரை வீட்டில் சந்தித்துள்ளார். நேற்று நடிகை கஸ்தூரியை தனது வீட்டில் சந்தித்தார். சினிமாவில் வாய்ப்பில்லாத கஸ்தூரி சமீப நாட்களாக திடீர் ஆன்லைன் போராளியாக மாறி கருத்து மழை பொழிந்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து கருத்து தெரிவித்தார். அதற்கு எதிர்வினையாற்றிய ரஜினி ரசிகர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததுடன், இவர்களை வைத்துக் கொண்டா ரஜினி அரசியல் செய்யப் போகிறார் என்றெல்லாம் கேட்டிருந்தார் ஆனால் அரசியல், சினிமாவில் காட்சி எப்போது எப்படி மாறும் என்று தெரியாது. நேற்று திடீரென்று ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசினார் கஸ்தூரி. இன்று தந்தி டிவிக்காக ரங்கராஜ் பாண்டே நடத்தும் மக்கள் மன்றம் என்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் கஸ்தூரியும் ஒருவர். விவாதத்துக்கான தலைப்பு: ரஜினி அரசியலுக்கு வருவது எதார்த்தமே… எதிர்க்க வேண்டியதே!
images rajini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *