ரஜினி, கமல் தனிக்கட்சிதான் தொடங்குவார்கள் : திருநாவுக்கரசர்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்தாலும் மாநில கட்சிகளையோ, தேசிய கட்சிகளையோ ஆதரிக்காமல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-ரஜினி அரசியலுக்கு வருவாரா? கமல் வருவாரா? உங்களை ஆதரிப்பாரா? என்றெல்லாம் கேட்கிறீர்கள்.இதை நான் எப்படி சொல்ல முடியும். முதலில் அரசியலுக்கு வரட்டும். அப்புறம் பார்ப்போம்.என்னை பொறுத்தவரை இவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தாலும், மாநில கட்சிகளையோ, தேசிய கட்சிகளையோ ஆதரிக்க மாட்டார்கள். தனிக்கட்சிதான் தொடங்குவார்கள்.நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களை பாழாக்கி விட்டது. விலக்கு வாங்குகிறோம் என்று சொல்லி சொல்லியே டெல்லிக்கு போகிறார்கள், வருகிறார்கள். ஆனால் எதுவும் நடந்த பாடில்லை.இப்போது அப்படிதான் அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *