ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

Comments (0) இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ரம்ஜான் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் உள்ள வேறுபாடுகளே அதன் தனித்துவம் மற்றும் பலம் என்று கூறியுள்ளார். ரம்ஜான் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரான், சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையை வலியுறுத்துவதாக கூறியுள்ளார். ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் கூறியுள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ரம்ஜான் பெருநாளில் உலகில் அமைதி நிலவி அன்பு தழைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முகமது நபிக்கு குரான் அருளப்பட்டதை கொண்டாடி மகிழும் நாளில் அமைதியும், சமாதானமும் பெருக இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் நலமுடன் வாழ்ந்திடவும், அமைதி, ஆனந்தம் பொங்கிடவும், ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.அதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *