ரயில்வே தனியார் மயமாக்கம் -ஜவாஹிருல்லா கண்டனம்

Comments (0) இந்தியா, தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாபத்தை ஈட்டும் ஒரு அரசுத் துறையைத் தனியார் மயமாக்குவது என்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக தெரிவித்துள்ளார். தனியார் மயமாக்கல் என்பது ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வழிவகுத்து வேலைவாய்ப்பைக் குறைக்கும் நடவடிக்கை என்றும், இதன்மூலம் சமூகநீதி கொள்கையான இடஒதுக்கீட்டுக் கொள்கையும் முழுமையாகப் பறிபோகும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.எனவே மத்திய பாஜக அரசு இதுபோன்ற பொதுநலனுக்கு எதிரான மக்கள் விரோத திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *