ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 20 ரூபாய் உயர்வு..!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ரயில் நிலையங்களில் பிளாட் ஃபார்ம் டிக்கெட்டின் விலை 10 லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி, கும்பகோணம், நாகை, திருவாரூர், வேளாங்கன்னி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பிளாட் ஃபார்ம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில், திருச்சி ரயில் நிலையத்தில் இன்று முதல் பிளாட்பாரம் டிக்கெட் விலை 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், தஞ்சை, கும்பகோணம், நாகையில் ஆகஸ்ட் 15 முதல் பிளாட்பாரம் டிக்கெட் விலையை 20 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் தேவையில்லாத கூட்டத்தை கட்டுப்படுத்தவே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *