ராஜமரியாதையுடன் விடைபெற்ற உசைன் போல்ட்!

Comments (0) உலகம், செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உலக தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள உசைன் போல்ட் நேற்று (ஆகஸ்டு 5) லண்டன் நகரில் 16-வது உலக தடகள போட்டியில் தோல்வியடைந்து அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தார்
205 நாடுகள் பங்கேற்கும் இதில் 24 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. பிரபல ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட், ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். உலக தடகளத்தில் 11 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள உசைன் போல்ட் தோல்வியைத் தழுவாமல் விடைபெறுவேன் என போட்டிக்கு முன்னதாக கூறியிருந்தார்.இந்நிலையில், மிக முக்கிய போட்டியான 100மீ ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், அமெரிக்க வீரர் கட்லின் 100 மீட்டர் தூரத்தை 9.92 விநாடிகளிலும், அவரது சக வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர். உசைன் போல்ட் 9.95 விநாடிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்து அதிர்ச்சியளித்தார். உசைன் போல்ட் இதற்கு முன்னதாக 2009ஆம் ஆண்டே 9.58 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதிப்போட்டியில் வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றிருந்தாலும், ரசிகர்கள் உசைன் போல்ட்டுக்கு சிறப்பான மரியாதையை வழங்கி கௌரவித்தனர். உசைன் போல்டினை வீழ்த்திய மகிழ்ச்சியில் கட்லின் உசைன் போல்டினை கீழே அமைந்து வணங்கினார். உசைன் போல்ட் அவரை கட்டி அணைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 • 1502024638c
 • 1502024638a
 • World Athletics Championships

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *