ரூ. 900 கட்டணத்தில் விமானச் சேவை – ஏர் ஏசியா அதிரடி

Comments (0) செய்திகள், வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை அளித்து வரும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் தற்போது மற்றும் ஒரு அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது.இந்தக் குறைந்த கால ஏர் ஏசியா நிறுவனத்தின் டிக்கெட் சலுகையின் மூலமாக ரூ. 950

ல் விமானப் பயணம் செய்யலாம். டெல்லி, கோவா, பெங்களூரு. ஐதராபாத், புனே, கொல்கத்தா, இன்னும் பல வழித்தடங்களில் இந்த அதிரடி ஆஃபரை பயன்படுத்திப் பயணம் செய்யலாம்.இந்தச் ஆஃபரில் ஜூன் 26 முதல் ஜூலை 2-ம் தேதி வரை புக் செய்து வரும் நவம்பர் 23 தேதி வரையிலான விமானப் பயணங்களை மேற்கொள்ளலாம் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது. இந்த ஆஃபரில் கொச்சி-பெங்களூரு, கோவா-பெங்களூரு, கவுகாத்தி-இம்பால், ஐதராபாத்-பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களும் உள்ளது. இருவழிப் பயணங்களுக்கும் இந்த ஆஃபர்களைப் பயன்படுத்தலாம்.இந்த ஆஃபர்களை தவிர, சில வழித்தடங்களுக்கு ரூ.1250 முதல் ரூ. 5073 ரூபாய் வரை டிக்கெட் கட்டணங்களை அறிவித்துள்ளது. ஆனால் கிரெடிட், டெபிட் ஏதாவது பிற கார்டுகள் பயன்படுத்தி பரிவர்த்தனைகளுக்கு செயல்பாடு கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.
தவிர, டிக்கெட்கள் குறைந்த அளவே கிடைக்கும் . எல்லா விமானங்களிலும் சலுகை கிடைக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *