லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழகத்தில் அனைத்துத்துறைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. மக்களைப் பாதுகாக்கும் காவல்துறையினரே மக்களிடம் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது. அதையடுத்து, பொதுமக்களே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்து லஞ்சம் கேட்கும் போலீஸாரைப் பிடித்துக் கொடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.வேலூர் காட்பாடி அருகில் பலகொல்லை கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர், பணமடங்கி காவல் நிலையத்தில் கடந்த 2016இல் கிரிமினல் புகார் கொடுத்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. அதனால், ‘நீதிமன்றச் செலவுக்கு ரூ.10,000 கொடுங்கள்’ என்று லத்தேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன், சம்பத்திடம் கேட்டுள்ளார். அதன்பிறகு பேரம் பேசி, ரூ.8,000 கொடுப்பதாக ஒப்புக்கொண்ட சம்பத், இதுகுறித்து வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியனிடம் புகார் கொடுத்தார்.அதன்பேரில், ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்மீது விசாரணை செய்தபோது, அவர் லஞ்சம் வாங்குவது தெரியவந்த பிறகு, சம்பத் மூலமாக கைப்பேசியில் பேசவைத்து ரெக்கார்டு பதிவு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, நேற்று ஜூலை 24ஆம் தேதி, ரசாயனப் பவுடர் தடவிய ரூ.8 ஆயிரத்தை சம்பத் மூலமாகக் கொடுத்து அனுப்பியது லஞ்ச ஒழிப்பு போலீஸ்.அதையடுத்து, இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரனை, சம்பத் நேரில் சந்தித்து ரூ.8 ஆயிரத்தைக் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாகப் பிடித்து, வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள். இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரனை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்த சம்பவம் தெரியவந்ததையடுத்து, வேலூர் மாவட்டக் காவல்துறையினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *