லண்டனில் 27 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலி.

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மேற்கு லண்டனில் உள்ள கிரன்ஃபெல் டவர் எனும் 27 மாடிக் குடியிருப்பில் 125 குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் அந்தக் கட்டிடத்தின் 2-வது தளத்தில் தீ பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கொளுந்துவிட்டு எரிந்த தீ அனைத்து தளங்களுக்கும் பரவியது.40 வாகனங்களில் சென்ற சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்கப் போராடினர். விரைந்து செயல்பட்டு 6 மணி நேரத்தில் படிப்படியாக தீயை அணைத்தனர்.சம்பவப் பகுதிக்கு சென்ற 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.தீ எரிந்து கொண்டிருந்த போது மீட்புக் குழுவினரால் அதிகபட்சமாக 12-வது தளம் வரையே செல்ல முடிந்ததாகக் கூறப்படும் நிலையில் தங்களால் இயன்றவரை குடியிருப்புவாசிகளை மீட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.தீ விபத்து நேர்ந்தபோது லண்டன் நேரப்படி நள்ளிரவு என்பதால் கட்டிடத்தின் மேல் தளங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்க வாய்ப்புள்ள ஏராளமானோர், உறக்க நிலையிலேயே தீயில் கருகியிருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.இதனிடையே உயிர் பிழைக்கும் பதற்றத்துடன் கட்டிடத்தின் மேல் தளங்களில் இருந்து பலர் குதித்ததைக் கண்டதாக கீழ் தளங்களில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டிடத்தின் 10-வது தளத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்த பெண், தன்னால் தப்பிக்க முடியாவிட்டாலும் தனது குழந்தையைக் காப்பாற்றி விடும் நோக்கில், குழந்தையை தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது.
அந்தக் குழந்தையை கீழிருந்தவர்கள் பிடித்துக் காப்பாறியதையும் கண்டதாக நேரில் பார்த்த ஒரு பெண் தெரிவித்தார். மேல் தளங்களில் இருந்து இறங்கி ஓடி வந்தவர்கள் புகையின் தாக்கத்தால் மூர்ச்சையாகி விழுந்ததையும் கண்டதாக பலர் தெரிவித்தனர்.nintchdbpict000331424528இதனிடையே இந்த தீ விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்புக்குழுவினர் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் உச்சித் தளம் வரை சென்ற பிறகே உயிரிழப்பு குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *