லண்டன் டவர் தீவிபத்து : எளிதில் தீப்பற்றும் தரக்குறைவான மேல்பூச்சே காரணம்

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

nintchdbpict000331424528 க்ரென்ஃபெல் டவர் தீவிபத்துக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய தரக்குறைவான மேல்பூச்சே காரணம் என தெரியவந்ததையடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.27 மாடிகளைக் கொண்ட இந்தக் குடியிருப்பில் 125 குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படும் நிலையில் 2-வது தளத்தில் பிடித்த தீ 27 மாடிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவோரில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.இதனிடையே அண்மையில் புதுப்பிக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் ஒப்பந்ததாரர்கள் மலிவு விலையிலான மேல் பூச்சை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள இந்த மேல்பூச்சில் எளிதில் தீப்பற்றக்கூடிய பாலி எதிலின் மூலக்கூறுகள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் குற்றவிசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *