லாக்கர்களில் வைக்கும் விலைமதிப்புமிக்க பொருட்கள் தொலைந்தால், வங்கி பொறுப்பாகாது- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Comments (0) இந்தியா, செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வங்கி லாக்கர்களில் வைக்கும் விலைமதிப்புமிக்க பொருட்கள் தொலைந்தால், அதற்கு வங்கி பொறுப்பாகாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வங்கி சேவைகளின் வெளிப்படைத் தன்மை குறித்து, குஷ் கல்ரா என்ற வழக்கறிஞர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.அதற்கு ஆர்.பி.ஐ. அளித்துள்ள பதிலில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, கனராவங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளின் லாக்கர்களில் பொருட்களை வைத்திருக்கும் வாடிக்கையாளரே தங்கள் பொருட்களுக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.லாக்கர்களில் வைக்கும் பொருட்கள் போர், சமூக பிரச்சனைகள்,கொள்ளை உள்ளிட்டவற்றினால் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.லாக்கர் விவகாரத்தில், வீட்டு உரிமையாளர், வாடகைதாரருக்கு உள்ள உறவே வங்கிக்கும், லாக்கர் வாடிக்கையாளருக்கும் இருப்பதாகக் கூறியுள்ள ஆர்.பி.ஐ., தேவைப்பட்டால், அதற்கு வாடிக்கையாளர் காப்பீடு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *