வரத்து அதிகரிப்பால் துவரம் பருப்பு விலை தொடர் சரிவு: கிலோ ரூ.55க்கு விற்பனை

Comments (0) செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வட மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் துவரம் பருப்பு விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது கிலோ ரூ.55க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் துவரை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து இந்தியா முழுவதும் துவரம் பருப்பு அனுப்பப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் வரலாறு காணாத அளவில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.225 வரை சென்றது. இதன் பின்னர் கடந்தாண்டு வட மாநிலங்களில் ஓரளவுக்கு மழை கை கொடுத்தால், துவரை விளைச்சல் அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த ஆறு மாதமாக வட மாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது.இதdhallு குறித்து சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த மொத்த பருப்பு வியாபாரிகள் கூறியதாவது: துவரம் பருப்பு பொருத்தவரை வட மாநிலங்களில் இருந்து தான் விற்பனைக்கு வருகின்றன. கடந்த டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு புதிய துவரம் பருப்பு வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிலோ ₹ 130லிருந்து படிப்படியாக விலை குறைந்து கடந்த மாதம் வரை கிலோ (மொத்த விலையில்) ரூ.65 முதல் ரூ.70 என விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் விலை மேலும் சரிந்து கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டது. தற்போது இந்த விலையும் குறைந்து ரூ.55க்கு விற்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு மார்ச்சில் கிலோ ரூ.60 முதல் ரூ.70 என விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.55க்கு துவரம் பருப்பு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு, விலை சரிந்துள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *