வருகிற ஜூலை மாதம் 17-ல் குடியரசு தலைவர் தேர்தல்

Comments (0) அரசியல், இந்தியா

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Rashtrapati-Bhavan-Delhiகுடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அடுத்த குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலுக்கான போட்டியில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் களம் இறங்கியுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ஆம் தேதி துவங்கும் என்றும், ஜூன் 28-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், ஜூன் 29-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசிலனை நடைபெறும் என அறிவித்தார்.வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஜூலை ஒன்றாம் தேதி என அறிவித்த ஜைதி, குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்த நஜீம் ஜைதி, தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 20-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *