‘விஐபி-2’ படத்தை இந்தியில் ரிலீஸ் பண்ணினால் கூடுதல் சம்பளம் -கஜோல் போர்க்கொடி

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நடிகர் தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படம் வெற்றியடைந்தது. அந்த வெற்றியை அடுத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படம் தொடங்கப்பட்டது. படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும், கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது. இந்த படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து பாடல்கள் மற்றும் டிரைலர் வருகிற 25-ம் தேதி வெளியாகவிருக்கிறது.இந்த படத்தை தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிடுவதாக சொல்லப்பட்ட ‘விஐபி-2’ படத்தை தற்போது இந்தியிலும் டப் செய்து வெளியிடும் திட்டத்தில் உள்ளன. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.‘விஐபி-2’ படத்தில் இந்தி நடிகை கஜோல், வில்லியாக நடித்திருப்பதால், அவரது புகழை வைத்து இந்தியில் கல்லா கட்ட முடிவு செய்துள்ளார்கள். ‘விஐபி-2’ படத்தை இந்தியில் ரிலீஸ் பண்ணினால் தனக்கு கூடுதல் சம்பளம் தர வேண்டும் என்று கஜோல் தற்போது 110271-vip-2 தூக்க தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *