விஜய் டிவியின் பிக் பாஸ் …….100 நாட்கள் தாக்கு பிடிக்குமா?

Comments (0) கலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. மிகவும் எளிமையான முறையில் நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கென்று அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வீடு பற்றி நேயர்களுக்கு விவரித்தார். வீட்டில் சமையல் அறை, குளியல் அறை, ஒப்பனை அறை, ஜிம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி பெட்ரூம் உள்ளன.வீட்டிற்கு சமைக்க தேவையான மளிகை பொருட்கள் அனைத்தும் வீட்டின் உள்ளே உள்ளன. மளிகை பொருட்கள் வீட்டின் பின்புறம் உள்ள ரகசிய வழிமூலம் நிரப்பப்படும். வீட்டின் உள்ளே எப்போதும் 15 பேர்தான். 15 பேருக்கு யாரும் இருக்க முடியாது. வீட்டின் உள்ளே மின் விளக்குகளை அணைத்துவிட்டாலும் கூட கேமரா மூலம் உள்ளே இருப்பவர்களை காணமுடியும். உள்ளே இருப்பவர்கள் 100 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டை சுற்றி 30 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாத்ரூம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
15 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய டைனிங் டேபிள், தனியாக புகை பிடிக்கும் பகுதி, அனைவரும் அமர்ந்து பேசக்கூடிய புள்வெளி பகுதி, உள்ளே தங்கியிருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகரும் உண்டு.
தில் 15 பேர் பங்கு பெறுகின்றனர். முதல் போட்டியாளர் ஸ்ரீ. மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, வழக்கு எண் படங்களில் இவர் நடித்துள்ளார்.

சிவா மனசுல சக்தி படத்தில் நடித்துள்ள நடிகை அனுயா இரண்டாவது போட்டியாளர் ஆவார்.

மூன்றாவது போட்டியாளர் நகைச்சுவை நடிகர் வையாபுரி.

காயத்ரி ரகுராம் – நடிகை மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஆவார்.

நடிகர் பரணி – கல்லூரி, நாடோடிகள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மாடல் ரய்சா வில்சன் – மாடலிங் துறையில் புகழ்பெற்றவர்.

பாடலாசிரியர் சினேகன் – நடிகர், கவிஞர், பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவர்.

நடிகை ஓவியா – களவாணி, கலகலப்பு படங்களில் நடித்துள்ளார்.

ஆர்த்தி – நகைச்சுவை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான இவர் சின்னத்திரை ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர்.

நடிகர் ஆரார் – அறிமுக நடிகரான இவர் சினிமாவில் சாதிக்க காத்திருக்கும் இளைஞர்.

கஞ்சா கருப்பு – இயக்குநர் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நகைச்சுவை நடிகர்!

ஜூலியானா – ஜல்லிக்கட்டில் எல்லோரின் கவனம் ஈர்த்த பெண்!

கணேஷ் வெங்கட்ராம் – உன்னைப்போல் ஒருவன் படம் மூலம் புகழடைந்த இளம் நடிகர்!

நடிகர் சக்தி – இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தி!

நடிகை நமிதா – தமிழில் மச்சான்ஸ் என அழைத்து அசத்தும் நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *