விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Comments (0) கலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழ் திரையுலகின் இளையதளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிக்கும் 61ஆவது படத்தின் Fisrt Look Poster வெளியிடப்பட்டுள்ளது.மெர்சல் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தினை, இயக்குநர் அட்லி இயக்குகிறார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது படமான மெர்சல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இயக்குநர் அட்லி இயக்கும் மெர்சல் படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் மெர்சல் ஆகும். கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிக்நிபுணர் என மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
க>ுஷியில் நடிகர் விஜய்யை இயக்கிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, மெர்சல் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மெர்சல் படத்தின் Fisrt Look Posterல், இளையதளபதி என்ற அடைமொழியுடன் வழக்கமாக குறிப்பிடப்படும் நிலையில், இம்முறை தளபதி என்ற அடைமொழியுடன் விஜய் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மக்கள் பேசும் மொழிவழக்கில், ‘மெர்சல்’ என்பதற்கு அச்சதோடு மிரள்வது என்பது அர்த்தமாகும்.

 • First Look of Mersal
 • Second Look of Mersal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *