விண்ணை முட்டும் வெங்காயம் விலை!

Comments (0) செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தக்காளியைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மத்தியப்பிரதேச அரசின் அதிகளவு கொள்முதல் காரணமாக வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியுள்ளது.லாசன்கான் சந்தையில் கடந்த வாரம் 700 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை தற்போது 1,400 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த வெங்காயத்தில் மகாராஷ்டிரா 30 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளது. மேலும், இம்மாநிலத்தின் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் இந்த லாசல்கான் சந்தையானது நாட்டின் மிகப்பெரிய வேளாண் விற்பனை சந்தையாகத் திகழ்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் வெங்காயத்தின் விலை சரிந்து வந்ததால் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2 லட்சம் டன் அளவிலான வெங்காயத்தை மத்தியப்பிரதேச அரசு கொள்முதல் செய்தது.அதிக உற்பத்தி காரணமாக வெங்காயத்தின் விலை குவிண்டாலுக்கு 600 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. எனவே, விவசாயிகளின் போராட்டம் காரணமாக அரசு சார்பில் குவிண்டால் ஒன்று ரூ.800 என்ற விலைக்கு வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்தது. இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநில அரசு வெங்காயத்தை அதிகளவில் கொள்முதல் செய்துள்ளதாலும், குஜராத் மாநிலத்தில் எதிர்பாராதவிதமாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதாலும், நாடு முழுவதும் வெங்காயம் சப்ளை செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து வரும் வெங்காய வரத்தும் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே அடுத்த அறுவடை முடிந்து வெங்காயம் சந்தைக்கு வரும் வரையில் வெங்காயத்தின் விலை அதிகமாகவே இருக்கும். அதாவது செப்டம்பர் மாதம் வரையில் இந்த விலையுயர்வு நீடிக்கும் என்று வேளாண் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை 1,800 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *