விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவாக நடிக்க உள்ளார் இந்தி நடிகர் அமீர் கான்

Comments (0) இந்தியா, கலை, சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

aamir-story_647_090615012443இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவாக பிரபல இந்தி நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளார்.
தற்போது தக்ஸ் ஆப் ஹின்டோஸ்தான் படத்தில் அமிதாப்பச்சனுடன் அமீர் கான் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ராகேஷ் ஷர்மாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் சல்யூட் என்ற படத்தில் அமீர் கான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்யூட் படத்தை சித்தார்த் ராய் கபூர், ரோனி ஸ்க்ரூவாலாவுடன் இணைந்து அமீர் கான் தயாரிக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் மகேஷ் மத்தாய் இயக்க உள்ளார்.
அண்மையில் வெளியான டங்கல் படத்தில் பிரபல மல்யுத்த வீரர் மகாவீர் பொகட்டாக நடித்திருந்த அமீர் கான், விரைவில் ராகேஷ் ஷர்மாவாக நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *