விமரிசையாக நடைபெற்ற பூரி ஜகந்நாதர் ஆலய தேரோட்டம்

Comments (0) இந்தியா, செய்திகள், மருத்துவம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஒடிசாவில் ஏராளமான பக்தர்கள் புடைசூழ உலகப்புகழ் பெற்ற பூரி ஜகன்நாதர் ஆலய தேரோட்டம் நடந்தது.
ஒடிசா மாநிலம் பூரி ஜகன்நாதர் ஆலய வருடாந்திர தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. பல்வேறு இசைக்கருவிகள் முழங்க ரதங்களுக்குள் சாமிகளின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து பூரி அரசர் கஜபதி திவ்யசிங் தேவ் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.ஜகன்நாதர், பாலபத்ரர் மற்றும் தேவி சுபத்திரா ஆகியோர் அமர்ந்திருந்த பிரம்மாண்டமான தேர்கள் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.மூன்று தேர்களையும் பெரிய சாலைகள் வழியாக கண்டிச்சா கோவில் வரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பூரி ஜெகந்நாதர் தேர்திருவிழா பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *