விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் – ஸ்டாலின் பேச்சு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் தமிழ் மாநில தேசிய லீக் சாரபில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்ராபாளராக கலந்து கொண்டார். இந்த நிகழச்சியில் உரையாற்றிய அவர்,இங்கு உரையாற்றிய அனைவரும் அடுத்த இப்தார் நிகழ்வில் நான் முதலமைச்சராக பங்கேற்க வேண்டும் என உரையாற்றியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். ஏன் அதற்காக ஒரு ஆண்டு காலம் காத்திருக்கவேண்டும் என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி. நான் செல்லும் இடமெல்லாம் குறிப்பாக நடைபயிற்சிக்கு செல்லும் போது கூட பொதுமக்கள் பலர் இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும்.திமுகவின் ஆட்சிஎப்போது மலரும் என தம்மிடம் கேள்விகளை எழுப்புவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் ஏற்பாடு செய்து இருந்தார். இதில் திமுக முன்னணி வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரகுமான்கான்,செய்யது ஹலீமத்துன் நூரிய்யா மதரசாவின் நிறுவனர் அல்ஹாஜ் எஸ்.எம். ஜெயினுதீன்,முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர், முன்னாள் கவுன்சிலர்.முகமது யாசின்,காங்கிரஸ் பிரமுகர் எம்.ஜெயினுலாபுதீன், கே.பாதுஷா,வதூது,சம்சுதீன், இல்யாஸ் ரியாஜி,திருவான்மியூர் ஹாஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.IMG_0034

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *