விரைவில் தாக்கலாகிறது மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மசோதா

Comments (0) இந்தியா, கல்வி, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பள்ளி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான மசோதா விரைவில் கொண்டுவரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டுமென 24 மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி மேல்சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பொதுத்தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *