விலை கொடுத்து வாங்கிய எம்எல்ஏக்களுடன் அதிமுக ஆட்சி தொடரலாமா?” : திமுக கேள்வி!

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

குதிரை பேரம் பேசி சசிகலா அணியினர் லஞ்சம் கொடுத்து வாங்கிய எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தமிழகத்தை அதிமுக ஆளுவது சரிதானா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா அணியினர் பேரம் பேசியதை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிக் ஆப்ரேஷனில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்கவைக்க அழைத்துச்செல்லப்பட்ட போது 2 கோடியில் தொடங்கிய பேரம் 6 கோடியில் முடிந்ததாகவும் பணம் மட்டுமல்லாமல் தங்க நகைகள் தரவும் சசிகலா அணியினர் ஒப்புக்கொண்டது தெரியவந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில எம்எல்ஏக்களுக்கு 10 கோடி ரூபாய் பணம் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.இந்நிலையில் விலை கொடுத்து வாங்கிய எம்எல்ஏக்களுடன் அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்வது சரிதானா என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உத்தம வேடம் அணிந்து தியானம், சபதம் செய்தவர்கள் எந்த அளவிற்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது டைம்ஸ் நவ் ஆதாரம் மூலம் வெளிவந்துள்ளதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.உத்தமர்MK stalin வேடமணிந்து தியானம்,சபதம் செய்தவர்கள் எந்தளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது @TimesNow ஆதாரம்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *