விழிப்புணர்வால் டெங்கு கட்டுக்குள் உள்ளது – விஜயபாஸ்கர்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழகத்தில், தொடர் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றால் டெங்கு கட்டுக்குள் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், டெங்கு மற்றும் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 85 பேர் காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில், டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் இதுவரை 100 சதவிகிதம் காப்பாற்றப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், 750 மருத்துவ குழுக்கள் அமைத்து, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக விளக்கமளித்தார். காய்ச்சல் தடுப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் 3 ஆயிரத்து 500 பேர் களப்பணியில் உள்ளதாகவும், கோவை, சேலம் போன்ற பகுதிகளில் டெங்குவின் தாக்கம் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார். கேரளாவில் டெங்கு பாதிப்பு உள்ளபோதும் அதன் எல்லையை ஒட்டிய கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் 100 சதவிகிதம் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். டெங்குவுக்கான அறிகுறி தென்பட்டாலே, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்படும் என்றும், சுயமாக மருந்து எடுத்துக் கொண்டு காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

 • vjibas
 • DSC00246
 • DSC00250
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு நன்னீர் கொசு என்றும், கூவம் ஆற்றில் அது பெருகாது என்றும் அமைச்சர் கூறினார். தேவையில்லாமல் குப்பை, நீரை தேக்கி வைத்திருந்தால் அவற்றின் உரிமையாளருக்கு அரசு அபராதம் விதிக்கும் எனவும் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார். சிறார்களுக்கு ஏற்படும் காய்ச்சல்கள் தொடர்பாக அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பதாகக் கூறிய அவர், ஒரு கிராமத்தில் 3 குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலே அங்கு தீவிரமாக மருத்துவக்குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபடும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *