விவசாயக் கடன் தள்ளுபடிக்கு மாநில அரசுகளே முழுப் பொறுப்பு – ஜெட்லி

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

விவசாயக் கடன் தள்ளுபடிக்கு மாநில அரசுகளே முழுப் பொறுப்பு என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, மகாராஷ்டிராவைப் போல் மற்ற மாநிலங்களும் தங்கள் சொந்த வளங்களில் இருந்து நிதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். முன்னதாக மகாராஷ்டிர அரசு நேற்று 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவித்தது. மத்தியப் பிரதேசத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக குழு அமைக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.இதdownload (7)னிடையே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். தொடர்ந்து தனது மாநிலத்துக்கு பண்ணைக் கடன் தள்ளுபடிக்காக 36 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழ்நிலையில் அருண் ஜெட்லியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *