விவசாயிகளுக்கு தனுஷ் கொடுத்த நிதியுதவி!

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

விஐபி-2 திரைப்படத்தின் ரிலீஸ் இப்போது அப்போது என பல தகவல்கள் வெளியான சமயத்தில், என் படத்தின் ரிலீஸ் எப்போதென நானே சொல்கிறேன் என்று கூறியிருந்தார் தனுஷ்.அதன்படி, நேற்று இரவு ஆகஸ்டு 11ஆம் தேதி விஐபி-2 ரிலீஸாகும் என ஒரு டிரெய்லருடன் இந்தத்தகவலை வெளியிட்டிருந்தார். விஐபி-2 திரைப்பட ரிலீஸைக் கொண்டாடிக்கொண்டிருந்தவர்களுக்கு மேலும் ஒரு கொண்டாட்டமாக தனுஷ் செய்த மற்றொரு காரியம் அமைந்தது.தமிழகம் முழுவதிலும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை அழைத்து சோழிங்கநல்லூரில் வைத்து 125 குடும்பங்களுக்கு

 • 1501678155
 • 1501678155b
செய்திருக்கிறார். ஒரு குடும்பத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் 62 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை தனது தந்தை கஸ்தூரி ராஜா, தாய் விஜயலக்ஷ்மி மற்றும் மனைவி ஐஸ்வர்யா முன்னிலையில் வழங்கினார். தனுஷின் இந்த நற்குணத்தை பாராட்டிக்கொண்டிருக்கும் அவரது ரசிகர்கள், தமிழக மீடியா இந்த செய்திக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கின்றனர்.Pirates of the Caribbean திரைப்படத்தின் ஐந்தாம் பாகத்தில் ஒரு காட்சி வரும். கேப்டன் சால்சர் மிகவும் கோரமானவர். அவர் கண்ணில் படும் யாரையும் கொல்லாமல் விட்டதில்லை என்று சிலர் சொல்லும்போது பிறகு, யார் இந்தக் கதையெல்லாம் சொன்னது? என்று கேப்டன் ஜேக் ஸ்பேரோ கேட்பார். அதன் தொடர்ச்சியாகத்தான், ஒவ்வொரு கப்பலாக சால்சர் வீழ்த்தும்போதும் தனது கதையைச் சொல்ல ஒருவரை உயிருடன் விடுவதாக அந்தத் திரைப்படம் தொடரும். அதன்படியே இந்த விஷயத்தைப் பார்த்தால், யாருமே சொல்லாமல் தனுஷின் இந்த நற்செய்தியை ரசிகர்கள் எப்படி அறிந்தார்கள்? என்ற கேள்வி எழுகிறதல்லவா?தனுஷ் தனது பப்ளிசிட்டிக்காக இந்த செயலைச் செய்யாததால், மீடியாக்களுக்கு அவரது பி.ஆர்.ஓ எனும் மக்கள் தொடர்பாளர்கள் மூலமாக இந்தச் செய்தியைத் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், அவரது நற்செயலைப் பாராட்டி எவ்வித ஊக்கமும் இல்லாமல் வெளியிடப்படுபவையே இந்தச் செய்திகள் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ளவேண்டுமல்லவா? புரிந்துகொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *