விவசாயிகள் போராட்டத்தில் சிவசேனா கட்சியினர்

Comments (0) இந்தியா

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

farmers-protest_650x400_41496728311மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டத்தில் சிவசேனா கட்சியினர் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநில விவசாயிகள் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் மற்றும் 35 சங்கங்களைச் சேர்ந்த மகாராஷ்டிரா தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவும் ஆதரவு தெரிவித்துள் ளது. இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆளும் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் களத்தில் குதித்துள்ளது. மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சாலை மறிய லில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *