விவேகம் ‘கதை’ சுடப்பட்டது ?

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் ‘விவேகம்’. அஜித் நடிப்பில் கடைசியாக ‘வேதாளம்’ வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 24 அன்று வெளிவரவுள்ளது.வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ‘விவேகம்’ படத்தை சிவா இயக்கியிருக்கிறார். படத்தின் விளம்பரத்துக்காக பல்வேறு ஊடகங்களின் நேர்காணல்களில் கலந்துகொண்டு படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்திருந்தாலும் படத்தின் மையக்கரு குறித்து சிவா இதுவரை பேசியதில்லை. இந்நிலையில் ஈரோட்டில் நடைபெற்ற தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் சிவா அதுகுறித்து முதன்முறையாகப் பேசியுள்ளார். மேலும், அந்த விழாவில் இயக்குநர் சிவாவுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ் கலந்துகொண்டார். அந்த விழாவில் இயக்குநர் சிவா கூறியதாவது: என்னுடைய முந்தைய படங்கள் எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். தல ரசிகர்கள் அனைவரும் அவருடைய படத்துக்காக பெரும் ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நான் தொடர்ந்து மூன்று படங்களை அஜித் சாரை வைத்து இயக்கியுள்ளேன். என்னுடைய இந்தப் படங்களுக்கான மையக்கருவை அஜித் சாரின் வாழ்கையில் இருந்தே திருடியிருக்கிறேன். தற்போது வெளிவர இருக்கும் விவேகம் படம் விடாமுயற்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே. இதை முதன்முறையாக இங்குதான் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
சிவாவைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சதீஷ் பேசுகையில் நான் எங்கே போனாலும் என்னிடம் கேட்கும் கேள்வி ‘நீங்கள் எப்போது தல கூட நடிக்கப் போறீங்க?’ என்பதுதான். அதற்கு எப்போதும் தளபதி ஸ்டைலில் ‘ஐ ஆம் வெய்ட்டிங்’ என்பதே என் பதிலாக இருந்தது. இனிமேல் அப்படிக் கேட்பவர்களிடம் இயக்குநர் சிவாவின் தொலைப்பேசி எண்ணைக் கொடுக்கப் போகிறேன். ஏனென்றால் அவர்தான் தொடர்ந்து தல படங்களை இயக்கி வருகிறார். அவர்தான் வாய்ப்புதர முடியும்” என்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்து பேசிய இயக்குநர் சிவா, தனது அடுத்த படத்தில் கண்டிப்பாக சதீஷ் நடிப்பார் என்று உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *