வெள்ளை மாளிகையில் மோடிக்கு முதல் விருந்து தருகிறார் டிரம்ப்

Comments (0) இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வரும் திங்கள் கிழமை அதிகாலை அந்த நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சந்தித்துப் பேசுகிறார். தோழமையுடன் இந்த சந்திப்பு துவங்கும் என்று கருதப்படுகிறது.இதைத் தொடர்ந்து 5 மணி நேரம் சந்தித்துக் கொள்ளும் இருவரும் இருநாட்டு உறவுகள் குறித்து பேசுவார்கள் என்று தெரிய வந்துள்ளது..திங்கள் கிழமை அதிகாலை சர்வதேச நேரப்படி 1 மணிக்கு இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்கின்றனர். பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்க நேரம் ஒதுக்குகின்றனர். இதைத் தொடர்ந்து இருநாட்டு பிரதிநிதிகள் அளவிலான சந்திப்பு நடக்கிறது.
வெள்ளை மாளிகையில் அதிபர் குடும்பம் குடியேறிய பின்னர் முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி வெள்ளை மாளிகை செல்கிறார். அங்கு இரவு உணவும் சாப்பிடுகிறார். வெள்ளை மாளிகையில் டிரம்புடன் இரவு உணவு சாப்பிடும் முதல் உலகத் தலைவர் என்ற பெயரையும் மோடி பெறுகிறார். இந்தியாவின் ஆதரவு அனைத்து மட்டத்திலும் தேவை என்பதை உணர்ந்திருக்கும் அமெரிக்கா மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்க தயாராகி வருகிறது.இந்திய அமெரிக்க உறவு பலப்பட இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு பயன்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆசிய பசிபிக் மண்டலத்தில் இந்த இருநாட்டுத் தலைவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அமெரிக்கா உணர்ந்து வைத்திருப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், பிரதமர் மோடியும் அவரும் இருமுறை தொலைபேசியில் பேசிக் கொண்டாலும், தற்போது நேருக்கு நேர் சந்தித்து தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உள்ளனர். இந்த இருநாட்டுத் தலைவர்களும் சமூக பக்கங்களில் அதிக ஃபாலோவர்களைக் கொண்டுள்ளனர். டிரம்புக்கு 32.7 மில்லியன் என்றால் மோடிக்கு 30.9 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர்.
உலகப் பொருளாதரத்தில் இன்று மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா பல்வேறு சிறப்புக்களை பெற்றுள்ளது. அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவு, பாதுகாப்பு என அனைத்து வகையிலும் இந்தியாவின் நட்பு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது.இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பில் தீவிரவாதம், அதை எப்படி எதிர் கொள்வது, இந்திய பாதுகாப்புத்துறையை நவீனப்படுத்துவது, ஆசிய-பசிபிக் மண்டலத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பது, வர்த்தகம், மென்பொருள் பணியார்களுக்கான விசா கெடுபிடிகள் ஆகியவை குறித்து பேசப்படும் என்று தெரிய வந்துள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *