வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் ரசிப்பு

Comments (0) Uncategorized, சினிமா, செய்திகள், முன்னோட்டம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் பார்த்துள்ளதற்கு நடிகர் தனுஷ் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் ஹிட்டானது. இந்நிலையில் விஐபி இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். நடிகர் தனுஷ் கதை, திரைக்கதை எழுதியுள்ள இந்தப்படத்தில் அமலா பால் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகை கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். ரகுவரனை வரவேற்ற அனைவருக்கும் நன்றி என தனுஷ் டுவீட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *