110 விதியின் கீழ் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றம் : முதல்வர்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

110 விதியின் கீழ் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி.கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழக முதல்வர் .எடப்பாடி கே. பழனிசாமி இன்று (15.6.2017) தமிழக சட்டப்பேரவையில்,சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து கூறும்போது, ” 2011-12 முதல் 2015-16 முடிய ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறிவிப்புகளில்,872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கcm palanisamy(N)னதிட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன315 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவுறும் தருவாயில் உள்ளன. இதில் 7 அறிவிப்புகளுக்கான திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தினாலும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாலும் முன்னேற்றம் இல்லாமல் நிலுவையில் இருக்கின்றன.2016-17 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 175 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். 167 அரசாணைகள் வெளியிடப்பட்டு, அப்பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு, 20 பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 147 பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. 8 அறிவிப்புகளுக்கான திட்டப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்று வருகின்றன. 3 அறிவிப்பிற்கான திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.” என்று கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *