அதிமுக அம்மா அணியினரை சந்தித்து ஆதரவு கோரினார் ராம்நாத் கோவிந்த்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தனி விமானம் மூலம் சனிக்கிழமை அன்று சென்னை வந்த ராம்நாத் கோவிந்த், சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், அதிமுக அம்மா அணியினரை சந்தித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு, பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏக்கள், எம்.பிக்களிடம், பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஆதரவு கோரினார்.இந்த நிகழ்வில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 34 பேர் உட்பட, அதிமுக அம்மா அணியின் 120 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.முன்னதாக பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்திற்குச் சென்றார். அங்கு அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களை சந்தித்து ராம்நாத் கோவிந்த் ஆதரவு கோரினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை நிபந்தனை இன்றி ஆதரிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பியுடன் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தார்.
அதிமுக அம்மா அணியினரை சந்தித்து ஆதரவு கோர ராம்நாத் கோவிந்த் வந்தபோது, கலைவாணர் அரங்கிற்கு வெளியே, பாஜக சார்பில் மட்டும், வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரும் நிகழ்வு நடைபெற்று ரஷ்ய கலாச்சார மையத்தின் அருகில், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *