இளவரசனின் நினைவு நாளையொட்டி தர்மபுரியில் போலீசார் குவிப்பு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 • 07-ilavarasan21231-300
 • download (1)
 • download
 • Tamil_News_large_74963120130704154442
நினைவு நாள் என்பதால் நத்தம் காலனி மற்றும் செல்லன்கொட்டாய் பகுதிகளில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.தர்மபுரி மாவட்டம் நத்தம்காலனியை சேர்ந்தவர் இளவரசன். இவருக்கும் செல்லன்கொட்டாய் பகுதியை சேர்ந்த திவ்யாவும் காதலித்து வந்தனர்.வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு திவ்யாவின் தந்தை நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டதையடுத்து திவ்யாவின் தந்தை நாகராஜ் கடந்த 7.11.2012-ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த நாகராஜின் உறவினர்கள் நத்தம் காலனிக்கு சென்று இளவரசனின் வீட்டை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். அதனை தட்டிக்கேட்க வந்த அக்கம் பக்கத்தினரிடம் தகராறு ஏற்பட்டது.பின்னர் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அது பெரும் கலவரமாக மாறியது. இதில் நத்தம் காலனியில் உள்ள வீடுகளுக்கு தீவைத்து சூறையாடினர். இந்த சம்பவத்தால் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.இதைத்தொடர்ந்து இளவரசனுடன் வாழ விரும்பாமல் பெற்றோருடன் செல்வதாக திவ்யா நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவரை தாயாருடன் அனுப்பி வைத்தனர்.இதில் மனமுடைந்த இளவரசன் தர்மபுரி அரசு கலை கல்லூரி பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் கடந்த 4.7.13 தேதியன்று பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தினர்.இளவரசனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பிணத்தை வாங்காமல் அவரின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்த பின்னரே இளவரசனின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். பின்னர் நத்தம் காலனியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.இன்று இளரவசனின் நினைவு நாள் என்பதால் நத்தம் காலனி மற்றும் செல்லன்கொட்டாய் பகுதிகளில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *