டொனால்டு டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார்.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு துவங்கியது. பயங்கரவாதம் வெளிப்படையான வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார்.டொனால்டு டிரம்ப்-புதின் இடையேயான நட்பு குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்த நிலையில், முதல் முறையாக இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். இருவருக்கும் இடையில் நிகழ்ந்த முதல் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.ஜெர்மனி நேரப்படி பிற்பகல் இருவரும் தனியாக சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கு இடையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதிப்பார்கள் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *