2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ மிகவும் பிரபலம் அடையும்: எல்.பாலாஜி பேட்டி

Comments (0) செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

முதலாவது டி.என்.பி.எல். போட்டியை போலவே 2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியும் மிகவும் பிரபலம் அடையும் என்று வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி தெரிவித்துள்ளார்.டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டுட்டி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை சூப்பர் ஜெய்ன்ட், திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் 8 அணிகள் பங்கேற்றன.
இதில் தூத்துக்குடி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 2-வது இடத்தை பிடித்தது.
2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்ட் 20-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் போட்டி நடக்கிறது.
ஐ.பி.எல். பாணியில் ‘பிளேஆப்’ சுற்று நடக்கிறது. இதில் அதே 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.முதல் இடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும் ‘குவாலிபையர் 1’-ல் மோதும். இந்த ஆட்டம் சென்னையில் ஆகஸ்ட் 15-ந்தேதி நடக்கிறது. 3-வது இடத்தை பிடித்த அணியும், 4-வது இடத்தை பிடித்த அணியும் எலிமினேட்டரில் மோதும் இந்த ஆட்டம் ஆகஸ்ட் 16-ந்தேதி திண்டுக்கல்லில் நடைபெறும்.‘குவாலிபையர் 2’ ஆகஸ்ட் 18-ந்தேதி நெல்லையிலும், இறுதிப்போட்டி ஆகஸ்ட் 20-ந்தேதி சென்னையிலும் நடக்கிறது.வருகிற 22-ந்தேதி சென்னையில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- திண்டுக்கல்டி யதாவது:-முதலாவது டி.என்.பி.எல். போட்டியை போலவே 2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியும் மிகவும் பிரபலம் அடையும்.ஐ.பி.எல். போலவே இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நான் ரஞ்சி போட்டிக்காக இந்தியா முழுவதும் சென்றபோது டி.என்.பி.எல். பிரபலம் அடைந்ததே கேள்விப்பட்டேன்.டி.என்.பி.எல். போட்டி கிராமபுற வீரர்களுக்கும் நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்தப்போட்டி இளம் வீரர்கள் மிகவும் வேகமாக முன்னேற்றம் அடைய உதவியாக இருக்கிறது. ஜெகதீசன், டி.நடராஜன் போன்ற சிறந்த வீரர்கள் இதன்மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *