30 வயது நடிகை ஷெர்லியுடன் காதல் திருமணம் கொண்ட வேலுபிரபாகரன் , சர்ச்சைக்கு புது விளக்கம்

Comments (0) கலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

புரட்சிகருத்துகளை கூறுவதாக சினிமாபடம் எடுத்த 60 வயது இயக்குனர் வேலுபிரபாகரன் தனது படத்தில் நடித்த 30 வயது நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.30 வயது பெண்ணை மணந்த 60 வயது இயக்குனர் வேலுபிரபாகன்..! கடவுள் மறுப்பு கொள்கை உடையவர் என்று கூறிக் கொள்ளும் இவர் நாளைய மனிதன், அதிசயமனிதன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகவும், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கி அனல் பறக்கும் வசனங்களை பேசி நடித்தவர். கடந்த சிலவருடங்களுக்கு முன்பு காதல் கதை என்ற வயது வந்தோருக்கான படத்தை தயாரித்து இயக்கினார் வேலுபிரபாகரன். உலகில் காதல் என்று எதுவுமே கிடையாது எல்லாமே உடல் சார்ந்த இனக்கவர்ச்சி மட்டுமே என்றும் அவர் கூறி வந்தார்.இந்த நிலையில் தான் இயக்கிய காதல் கதை படத்தில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்த ஷெர்லி என்ற நடிகையை தற்போது காதலிப்பதாக கூறி இன்று மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார் வேலு பிரபாகரன். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் புரியாத புதிராக இருந்தது
கடவுள் இல்லை… காதல் இல்லை… புரட்சி… போராட்டம் என்று படத்திற்கு படம் சமூக விழிப்புணர்வு பிரசாரம் செய்வதாக கூறி வந்த வேலுபிரபாகரன் ஒரு கட்டத்தில் திரைபடத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆபாச பட இயக்குனராக மாறிப்போனார்.inset-veluஇந்த நிலையில் தான் தன்னை விட 30 வயது குறைவான நடிகை ஷெர்லியை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கின்றார். அண்மையில் வெளியான இவரது ஒரு இயக்குனரின் காதல் டைரி படத்தின் விளம்பரத்திற்காகவே தற்போது திருமண நாடகம் ஒன்றை வேலு பிரபாகரன் அரங்கேற்றியுள்ளதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *