வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவழியருக்கு முக்கியபதவி

Comments (0) அரசியல், உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அமெரிக்க அதிபர் டிரம்பின் முதன்மை துணை பத்திரிகையாளர் செயலாளராக செயல்பட்டுவந்த சாரா சண்டர்ஸ் முதன்மை பத்திரிக்கை செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து அவரது இடம் காலியானது. இதையடுத்து, அவரது இடத்திற்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ராஜ் ஷாவை நியமித்து வெள்ளை மாளிகை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜ் ஷா, முதன்மை துணை பத்திரிகையாளர் செயலாளர் பதவியுடன், அதிபரின் துணை உதவியாளராகவும் செயல்படுவார் என அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், வெள்ளை மாளிகையின் பத்திரிக்கையாளர் பிரிவில் இரண்டாம் நிலைக்கு அவர் முன்னேறியுள்ளார்.இவர் இதற்கு முன்னர் தகவல் தொடர்பு குழு உதவி இயக்குனராக செயல்பட்டு வந்தார்.ராஜ் ஷாவின் பெற்றோர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இஞ்ஜினியரான அவரது தந்தை சிறுவயதிலேயகுஜராத்தில் இருந்து மும்பை நகருக்கு வந்துள்ளார். தற்போது 32 வயதான ஷா, 1980களில் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *