4 நாட்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று திறக்கப்பட்ட போதிலும் கட்டணம் அதிகம் என்பதால் ரசிகர்களின் கூட்டம் …

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நான்கு நாட்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று திறக்கப்பட்ட போதிலும் கட்டணம் அதிகம் என்பதால் ரசிகர்களின் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
தமிழக அரசு சினிமா மீது விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 3-ந் தேதி முதல் திரையங்குகளை மூடி போராட்டம் நடத்தி வந்தனர். 4-வது நாளாக தமிழகம் முழுவதும் உள்ள 1000 தியேட்டர்கள் நேற்றும் மூடிக் கிடந்தன.
இதற்கிடையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அமைச்சர்களுடன் தியேட்டர் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, திரையரங்குகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.இதைதொடர்ந்து இன்று திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன .ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து கட்டணம் 196 ரூபாய் என்பதால் காலை காட்சிகளை காண குறைந்தளவே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *