5 வயது சிறுமி பலாத்கராம் செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கொடூரம்

கர்நாடகாவில் 5 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு, சாலையோரம் புதைக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவின் புறநகர்ப்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேஜி ஹள்ளி பகுதி போலீசார், நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் சிறுமி ஒருவர் குழி தோண்டி பாதி உடல் மட்டும் புதைக்கப்பட்ட நிலையில், உயிருக்குப் போராடி கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து, ரோந்து போலீசார் அந்த சிறுமியை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு, சிறுமிக்கு சுயநினைவு கொண்டுவரப்பட்டது. அதேசமயம், சிறுமியின் உடலை நன்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவள் கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டதை கண்டறிந்தனர்.சிறுமியின் பிறப்புறப்பில் பெரும் காயம் ஏற்பட்டு, ரத்தம் வடிந்தபடியே உள்ளது. இதனால், அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மrapeேலும், வன்புணர்வு கொடுமைக்கு ஆளானதாக, சிறுமி முதல்கட்ட விசாரணையில் தெரிவித்ததாக, போலீசார் கூறியுள்ளனர். இதுபற்றி, விரிவான விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Comments are closed.