55 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கூட்டுறவு சங்கங்களில் 573 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜுலை-7-ல் நடைபெறும் என்று மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் புதிதாக துவங்கப்பட்ட 50 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் செயலாட்சியர் நிர்வாகத்தில் இருந்துவரும் 5 சங்கங்களில் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 07.07.2017-ம் தேதி நடைபெறும் என்றும் இதற்கான வேட்புமனுத்தாக்கல் 30.06.2017 அன்றுநடைபெறும் என்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் திரு. ம.ரா. மோகன்,தெரிவித்துள்ளார்.55 சங்கங்களுக்கு 573 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும் மற்றும் 55 தலைவர் மற்றும் 55 துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இச்சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 30-ம் தேதியும், வாக்குப்பதிவு ஜூலை 7-ம் தேதியும் நடைபெறும். தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் ஜூலை 12-ம் தேதி அன்று நடைபெறும்.இந்த 573 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 107 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கும், 148 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.போட்டி இருப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 07.07.2017 அன்று காலை 8.00 மணிக்குத் துவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும்.வாக்குகள் எண்ணும் பணி 08.07.2017 அன்று காலை 10.00 மணிக்குத் துவங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 12.07.2017 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும். இத்தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்கங்களின் பெயர் விபரங்கள் குறித்து, அந்தந்த சங்கங்கள் தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆணையத்தின்வலைதளம் www.coopelection.tn.gov.in –ல் தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்கங்களின் பெயர் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *