7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ஒரேநாளில் 7 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார்.பாகிஸ்தான் தீவிரவாதிகள் அவ்வப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் ஊடுருவலை இந்திய ராணுவத்தினர் முறியடித்து வருகின்றனர். இந்நிலையில், நவ்காம், மற்றும் யூரி ஆகிய இரு பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் இன்று ஊடுருவ முயற்சிகளை மேற்கொண்டனர். ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, இருதரப்பினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப் பட்டனர். ராணுவத் தரப்பில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதனிடையே புல்வாமா மாவட்டம் வான்போரா என்ற இடத்தின் அருகே தீவிரவாதிகள் வங்கி ஒன்றை கொள்ளையடிக்கும் முயற்சியை பாதுகாப் புப் படையினர் முறியடித்தனர். அப்பொது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தப் பகுதிகளில் ஏராளமான ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.maxresdefault

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *