பணம் இல்லா அவலம்- ஓடையில் மகளை புதைத்த தந்தை

Comments (0) இந்தியா

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

images (2)தெலுங்கானா மாநிலத்தில், கையில் காசு இல்லாததால், மகளின் சடலத்தை கழிவுநீர் ஓடையில் பெற்ற தந்தையே புதைத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மைலர்தேவபள்ளி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கழிவுநீர் ஓடையில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார், அந்த உடலை மீட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் அதே பகுதியை சேர்ந்த பவானி என்பவரின் சடலம் என தெரியவந்தது.இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பவானியின் தந்தையை அழைத்து விசாரித்துள்ளனர். உண்மையை ஒப்புக்கொண்ட அவர், இதற்காக தெரிவித்த காரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பவானியின் தந்தை பெந்தையா கடன் தொல்லையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார். போதிய வருமானம் இல்லாதால் பவானி அக்கம் பக்கத்தில் சிறு சிறு திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனிடையே பவானியின் சகோதரர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இறுதி சடங்கு வாங்குவதற்காக, பெந்தையா ரூ.50,000 கடனாக பெற்றிருந்தார்.இந்த கடனை அடைக்க முடியாமல் திணறி வந்த நிலையில் பவானி செல்போன் ஒன்றை திருடியதில், அதன் உரிமையாளர் வீடு தேடி வந்து கேவலப்படுத்திவிட்டு சென்றுள்ளார்.இதனால் மனமுடைந்த பவானி அன்றிரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கெனவே கடனில் மூழ்கி தத்தளித்து வரும் பெந்தையா, மீண்டும் கடன் வாங்க திராணியற்ற நிலையில் நள்ளிரவு வரை
காத்திருந்து பின்னர் வீட்டின் அருகாமையில் உள்ள கழிவுநீர் ஓடையில் மகளின் சடலத்தை புதைத்துள்ளார்.சம்பவம் நடந்து 3 வாரங்களுக்கு பின்னர் கழிவுநீர் ஓடையில் இருந்து சடலம் மிதந்ததை அடுத்து இச்சம்பவம்வெளியே தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *