தனது பார்ட்டியைதொடங்கியிருக்கிறார்-வெங்கட் பிரபு

Comments (0) சினிமா, செய்திகள், முன்னோட்டம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா உள்ளிட்ட பலருடன்

 • 201707131415022933_party-pooja2._L_styvpf
 • 201707131415022933_Venkat-Prabhu-Begins-his-PARTY_SECVPF
தனது பார்ட்டியைதொடங்கியிருக்கிறார்தமிழ் சினிமாவில் தனக்கே உரித்தான தனித்துவமான இயக்கத்துடன் இளைஞர்களை கவரும் வகையில் படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, வசூல் ரீதியாகவும் நல்லபடியாக அமைந்தது.இந்நிலையில், வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் `பார்ட்டி’. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்க இருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிஜி தீவுகளில் படமாக்க பட இருக்கும் பார்ட்டி படத்தின் நட்சகத்திர அறிமுகம் மிக பெரிய அளவில் வெங்கட் பிரபுவுக்கே உரிய பாணியில் நடந்தது, படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.இந்நிலையில், படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *