நடராஜன் கவலைக்கிடம்: சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

Comments (0) அரசியல், உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சசிகலாவின் கணவரும், தமிழுணர்வு வட்டத்தில் புரவலராக அறியப்பட்டவருமான ம.நடராஜன் உடல் நிலை மோசமாகி சென்னையிலுள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமே அறிவித்திருக்கிறது.’நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் செயலிழந்துவிட்டன. சிறுநீரக பிரச்னைக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இப்போது அவரது உடல் நிலை கவலைக்கு இடமாகவே இருக்கிறது. இதை அவரது குடும்பத்தினர் புரிந்துகொண்டிருக்கிறார்கள்’ என்று செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது குளோபல் மருத்துவமனை.நடராஜனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில்… பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி சந்தித்து, ‘நீங்க உடனே பரோலுக்கு கேட்டு சென்னை போயி அவரைப் பார்க்கணும்’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் நடராஜனின் உடல்நிலை பற்றி கேட்டுக் கொண்ட சசிகலா தான் பரோலில் வருவது பற்றி எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.இதற்கிடையில் நடராஜனை மருத்துவமனையில் சென்று திவாகரனும் சந்தித்து வந்துள்ளார். சென்னையில் தினகரனும், திவாகரனும் சந்தித்து நடராஜன் உடல் நிலை பற்றி பேசியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *